www.garudabazaar.com
www.garudabazaar.com

இரண்டு கலைமாமணி விருதுகள்... வெற்றி கொண்டாட்டத்தில் ஷிவாங்கியின் குடும்பம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

shivaangi family celebration கொண்டாட்டத்தில் ஷிவாங்கியின் குடும்பம்

அதிலும் முக்கியமாக இந்த சீசனை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஷிவாங்கியின் அம்மாவைத் தவிர அவரது குடும்பத்தினரை பலரும் பார்த்ததில்லை. ஷிவாங்கியின் குடும்பமே இசை துறையை சார்ந்தவர்கள் தான். அவரது தந்தை கிருஷ்ணகுமார் மற்றும் தாயார் பின்னி கிருஷ்ணகுமார் இருவருமே கர்நாடக பாடகர்கள். சந்திரமுகி படத்தில் புகழ்பெற்ற "ரா ரா' பாடலை அவரது அம்மா தான் பாடியுள்ளார். இந்நிலையில் அம்மாவும் ஒரு புகழ் பெற்ற பாடகி ஆவார். இந்நிலையில் அவரது தந்தை தாய் இருவருக்கும் தற்போது கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஷிவாங்கி கூறும்போது "வாழ்த்துக்கள் 'கலைமாமணி' கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார். அப்பா அம்மா இந்த விருது பெற்றதில் மிகவும் பெருமை" என்று கூறியுள்ளார்.

Tags : Shivangi

shivaangi family celebration கொண்டாட்டத்தில் ஷிவாங்கியின் குடும்பம்

People looking for online information on Shivangi will find this news story useful.