www.garudabazaar.com

செகண்ட் டைம் 'இப்படி' நடக்குது... இதுக்குத்தான் 'அவங்க' உள்ள இருக்கணும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் பிக்பாஸ் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தார். இதில் நிஷா, அனிதா இருவரும் கடைசிக்கட்டம் வரை போட்டியிட்டனர். முடிவில் அனிதா வெற்றி பெற்றதாக பிக்பாஸ் அறிவித்தார். இதனால் இந்த வாரம் அவர் நாமினேஷன் லிஸ்டில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுக்குத்தான் அவங்க உள்ள இருக்கணும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'She is a real game changer' Netizens praised Anitha

கடந்தமுறை டாப்பிள் கார்டை நிஷாவிடம் இருந்து கைப்பற்றிய அனிதா, அதை பயன்படுத்தி சம்யுக்தாவை நாமினேட் செய்தார். சம்யுக்தா வீட்டைவிட்டு வெளியேற ஆட்டம் கொஞ்சம் மாறியது. இதனால் அனிதாவை கேம் சேஞ்சர் என அனைவரும் புகழ்ந்தனர். மீண்டுமொருமுறை அதுபோல தற்போது நடைபெற்று இருக்கிறது. அனிதா நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறவில்லை.

பிக்பாஸ் போட்ட ஸ்கெட்ச்சில் கேப்ரியலா, சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். அதோடு நிஷாவும் இந்த லிஸ்டில் இருக்கிறார். இவர்களில் ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறும் பட்சத்தில் போட்டியாளர்களின் உண்மையான விளையாட்டு வெளிப்படும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதையடுத்து அனிதா தான் உண்மையான கேம் சேஞ்சர் என புகழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

'She is a real game changer' Netizens praised Anitha

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.