ஷங்கரின் அடுத்த படம்.. இந்தியன்-2 Gap-ல் நெக்ஸ்ட் பிரம்மாண்டம்.!! முதல்முறை இந்த ஜானரில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படம் குறித்து செம தகவல் தெரிய வந்துள்ளது. 

ஷங்கரின் அடுத்தப்பட தகவல் | Exclusive news on shankar's next film before kamal hassan starring indian 2

தமிழ் சினிமாவில் தனது பிரம்மாண்டமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் ஷங்கர். இவர் தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதால், தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஷங்கரின் அடுத்தப்பட தகவல் | Exclusive news on shankar's next film before kamal hassan starring indian 2

இந்நிலையில் இப்போது நடிகர் கமல் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதை தொடர்ந்து, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள விக்ரம் படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தற்போது இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப்படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் பிசியாகியுள்ளார். இத்திரைப்படம் பாகுபலி படத்தை போல பிரம்மாண்டமான பீரியட் திரைப்படம் எனவும் கூறப்படுகிறது.

ஷங்கரின் அடுத்தப்பட தகவல் | Exclusive news on shankar's next film before kamal hassan starring indian 2

மேலும் முதல்முறையாக இப்படி ஒரு பீரியட் படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்த கோலிவுட்வாசிகள். 

 

Tags : Shankar

தொடர்புடைய இணைப்புகள்

ஷங்கரின் அடுத்தப்பட தகவல் | Exclusive news on shankar's next film before kamal hassan starring indian 2

People looking for online information on Shankar will find this news story useful.