RRR Others USA
www.garudabazaar.com

"ஜாலியோ ஜிம்கானா".. ஆட்டத்தில் செம Tough கொடுக்கும் Bigg Boss சென்றாயன்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார், முதல் முறையாக விஜய்யுடன் 'பீஸ்ட்' திரைப்படத்தில் கை கோர்த்துள்ளார்.

Senrayan dances for jolly o gymkhana video gone viral

மோகன் - குஷ்பூ இணையும் 'ஹரா' .. வெளியான அசத்தல் 'அப்டேட்'.. ஜாலி மோடில் 90S கிட்ஸ்..

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், யோகி பாபு, VTV கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் பீஸ்ட் திரைப்படம், ஐந்து மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளதை படக்குழு அறிவித்திருந்தது. அது மட்டுமில்லாமல், பீஸ்ட் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் இன்று வெளியாகலாம் என்பது போன்ற ட்வீட்டையும் இயக்குனர் நெல்சன் நேற்று பதிவிட்டிருந்தார்.

புதிய அப்டேட் என்ன?

இதனால், ரசிகர்கள் அனைவரும் என்ன அப்டேட்டாக இருக்கும் என்பது பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் உள்ளனர். முன்னதாக, பீஸ்ட் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள், ஏற்கனவே வெளியாகி இருந்தது. முதலாவதாக, 'அரபிக்குத்து' என்ற பாடலும், இதற்கு அடுத்தபடியாக 'ஜாலியோ ஜிம்கானா' என்ற பாடலும் வெளியாகி, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த இரண்டு பாடல்களுக்கும், பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரி நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களாக வெளியிட்டு வந்தனர்.

Senrayan dances for jolly o gymkhana video gone viral

திணறிய சென்றாயன்

இதில், ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலை நடிகர் விஜய் தான் பாடி இருந்தார். முழுக்க முழுக்க பாசிட்டிவ் வரிகளால் உருவாக்கப்பட்டிருந்த பாடல், பலரின் வாழ்க்கைக்கு தெம்பு கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில், நடிகர் சென்றாயன் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முழு எனர்ஜியுடன் விடாமல் ஆடிக் கொண்டே இருக்கிறார் சென்றாயன். நடுவில் சில முறை, ஒன்றிணைந்து ஆடவும் சிறிதாக தடுமாறுகிறார். இருந்தாலும், அவருடைய எனர்ஜி எங்கும் குறையவில்லை.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில், போட்டியாளராக சென்றாயன் களமிறங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கைல ஸ்க்ரிப்ட் பேப்பர்.. உள்ளுக்குள்ள நிறைய Confusion.. வைரலாகும் மாளவிகா மோகன் இன்ஸ்டா ஸ்டோரி

 

மேலும் செய்திகள்

Senrayan dances for jolly o gymkhana video gone viral

People looking for online information on Jolly o gymkhana Song, Senrayan, Senrayan dance, Senrayan dances for jolly o gymkhana video will find this news story useful.