திரைப்படங்களைப் போலவே டிவி சீரியல்களுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சின்னத்திரை நடிகர்களின் கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை தங்கள் வீட்டு விஷேசம் போல மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஜி தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' தொடர் மிகப் பிரபலம். அந்த தொடரில் நடித்த பாரதாவிற்கு சமீபத்தில் பரத் என்பவருடன் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனை அவரது தோழியும் பேரழகி சீரியலில் நடித்து வரும் இந்துஜா ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இறுதியா நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆகிட்டிங்க என்று அந்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tags : Sembaruthi, Bharatha