www.garudabazaar.com

என்ன மறுபடியும் 'மொதல்ல' இருந்தா... இந்த வாரம் 'பஞ்சாயத்து' கன்பார்ம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் ஆரி, ரியோ இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ரியோ வென்று இரண்டாவது முறையாக கேப்டன் ஆனார். இதையடுத்து சபையை கூட்டிய ரியோ யார், யாருக்கு என்னென்ன டீம் என்பதை பிரித்து வழங்கினார். அதன்படி பிரச்சினைகளுக்கு பெயர் போன கிச்சன் டீமில் சுசித்ரா, ரியோ, அனிதா, ஷிவானி, ரம்யா ஆகியோர் உள்ளனர்.

Sanam, Balaji Murugadoss both are in the Same Team

பாத்ரூம் கிளீன் பண்ணும் அணியில் சோம், ஆஜீத் ஹவுஸ் கீப்பிங் அணியில் சனம், கேப்ரியலா, பாலாஜி ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். பாத்திரங்கள் கழுவ அர்ச்சனா, ரமேஷ், நிஷா, ஆரி ஆகியோர் உள்ளனர். வேல்முருகன் இருந்தபோது பாலாஜி ஹவுஸ்கீப்பிங் அணியில் இருந்தார். அப்போது அவரை எழுப்ப போய் தான் பெரிய பிரச்சினை ஆனது.

தற்போது மீண்டும் பாலாஜி ஹவுஸ் கீப்பிங் அணியில் இடம்பெற்று இருக்கிறார். அதேபோல சனமும் அந்த அணியில் இருப்பதால் வருகின்ற வாரம் எக்கச்சக்க கண்டெண்ட் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதேபோல கிச்சன் டீமிலும் பிரச்சினைகள் வரலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸில் பிரச்சினை இல்லாத கிச்சன் டீமா? அது கனவிலும் நடக்காது பாஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Sanam, Balaji Murugadoss both are in the Same Team

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.