www.garudabazaar.com

ஆர்.கே.சுரேஷ், கயல் ஆனந்தி கைகோர்க்கும் ‘ஒயிட் ரோஸ்’.. சைக்கோ திரில்லர் படம்.. ஒன்லைன் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படம் மூலம் பட்டை தீட்டப்பட்டவர் நடிகர் ஆர்.கே. சுரேஷ்.

RK Suresh Anandhi Starring Psycho thriller movie white rose

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக தெறிக்கவிட்டவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். தமிழ் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு பரிமாணங்களில் நடித்துவரும் ஆர்.கே. சுரேஷ், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை உள்ளிட்ட படங்களை தயாரித்ததுடன் பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்து வந்தார் ஆர்.கே.சுரேஷ்.

'ஒயிட் ரோஸ்'

இவர் தான் தற்போது 'ஒயிட் ரோஸ்' என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் அறிவிப்பு பொங்கல் திருநாளான இன்று வெளியானது. இதில் இன்னொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார். இதில் நாயகியாக கயல்' ஆனந்தி நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் சுசிகணேசனிடம் சினிமா பயின்றவர்.

கதையின் மையக்கரு

மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. சைக்கோ திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. இந்த பொங்கல் திருநாளில் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பை நடிகர் எஸ். ஜே. சூர்யா வெளியிட்டு படக்குழு வுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்

ராஜசேகரன் இயக்கும் இந்த திரைப்படத்துக்கு நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவநேஷ் இப்படத்துக்கு இசையமைக்க, கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.  ஸ்டண்ட் சில்வா இப்படத்துக்கு சண்டைப் பயிற்சி அளிக்க, தினேஷ் நடனம் அமைக்கிறார்.

Also Read: சயின்ஸா? சாமியா?..  கண்ணம்மாவின் பொங்கலில் ‘நீதி காத்த அம்மன்’ வெச்ச ட்விஸ்ட்! குழம்பிய பாரதி!

தொடர்புடைய இணைப்புகள்

RK Suresh Anandhi Starring Psycho thriller movie white rose

People looking for online information on Aanandhi, Kayal Anandhi, RK Suresh will find this news story useful.