திரௌபதியை காண தியேட்டரில் குவியும் கூட்டம் - மூன்று நாளில் படத்தின் கலக்ஷன் என்ன தெரியுமா.!
முகப்பு > சினிமா செய்திகள்திரௌபதியை படம் வெளியானதையடுத்து, தற்போது அதன் மூன்று நாள் கலக்ஷன் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன். இவர் தற்போது திரௌபதி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரிஷி ரிச்சர்ட் ஹீரோவாகவும், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த வாரம் வெளியான இத்திரைப்படத்தை காண பெருமளவு கூட்டம் தியேட்டர்களுக்கு விசிட் அடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திரௌபதி படத்தின் மூன்று நாள் கலக்ஷன் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் இத்திரைப்படம் மூன்று நாட்களில் சுமார் 7.21 கோடி கலக்ஷன் அள்ளியிருப்பதாக கூறப்படுகிறது. சென்னையை காட்டிலும் கோவை, சேலம், திருச்சி ஏரியாக்களில் படம் நல்ல கலக்ஷனை எடுத்திருப்பதாக நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். க்ரவுட் ஃபன்டிங் முறையில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்துக்கு வந்திருக்கும் கலக்ஷன் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.