www.garudabazaar.com

ரம்யாவை நாமினேட் பண்ணதுக்கு 'இதெல்லாம்' ஒரு காரணமா?... கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நேற்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாமினேஷன் படலம் நடந்தது. இதில் சனம் ஷெட்டி, வேல்முருகன், ரியோ ஆகிய மூன்று பேரையும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் அவர்கள் இதில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர். இதேபோல முதல் வாரம் என்பதால் அர்ச்சனாவையும் யாரும் நாமினேட் செய்யவில்லை.

Rio Raj nominated Ramya Pandian for Eviction process

இதனால் மீதமிருக்கும் போட்டியாளர்களை அனைவரும் நாமினேட் செய்தனர். ஆச்சரியப்படும் விதமாக சம்யுக்தா, சோமசேகர் இருவரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. அதே நேரம் அனிதா சம்பத், ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆஜித் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்தனர். கடந்த வாரம் 7 பேர் நாமினேட் ஆன நிலையில் தற்போது 5 ஆக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியனை நாமினேட் செய்ய ரியோ சொன்ன காரணம் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. மாஸ்க் டாஸ்க்கில் தனக்கு மாஸ்க் கொடுத்த அனைவரும் தன்னிடம் வந்து ஸாரி சொல்லி விட்டதாகவும் ஆனால் ரம்யா அவ்வாறு செய்யவில்லை என்றும் அவரை நாமினேட் செய்வதாகவும் ரியோ தெரிவித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு காரணமா பாஸ்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Rio Raj nominated Ramya Pandian for Eviction process

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.