Video: KV ஆனந்தின் மாரடைப்புக்கான காரணம் இதுவா? விளக்கும் பிரபல மருத்துவர்.. விழிப்புணர்வு பேட்டி!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தின் மரணம் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல் தமிழ் நாட்டையே உலுக்கி இருக்கிறது.
சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து அயன், கோ, கவன், காப்பான், அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். இப்படியான வெற்றிப்படங்களை கொடுத்த கே.வி.ஆனந்தின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியது என்றால் இன்னொருபுறம் அவருடைய உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதே சமயம் வீட்டுக்குள் எடுத்துச் செல்லப்படாமல் சில நிமிடம் மட்டுமே உறவினரின் பார்வைக்கு வைக்கப்பட்டு நேரடியாக பெசன்ட் நகரில் இருக்கும் தகன மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது இன்னும் சோகம்.
அவருடைய மரணம் மாரடைப்பால் நிகழ்ந்தது என்று கூறப்படும் நிலையில் மருத்துவர் அருணாச்சலம் Behindwoodsக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இது குறித்த பல்வேறு தகவல்களை மருத்துவ ரீதியாக பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது, “40 வயதுக்கு மேல் ஆனாலே உடல் உறுப்புகள் பழுதடைந்து மூப்பை காட்டிக் கொடுக்கும் வகையில் தலைமுடிகள் நரைப்பது, கண்பார்வை திறன் மங்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இதற்கு முக்கிய காரணம் நாம் பள்ளிகளில் பயிலும் உடற்கல்வி வாழ்க்கைக்கு எடுத்துச் செல்லாதது தான்.
திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் இப்படியான உடற்பயிற்சி உள்ளிட்டவற்றுள் கவனமாக இருந்தாலும் கூட அவர்கள் பல்வேறு நுணுக்கமான செயல்பாடுகளை செய்வதற்காக அதிக ஆற்றல்களை, அதிக உழைப்பை கொடுக்கின்றனர். இயக்குநர் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். ரஜினி நடித்த சிவாஜி திரைப்படம் உள்ளிட்ட பல ஷங்கர் படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார் என்பதையும் பார்க்க முடிகிறது. இவர் போன்ற ஆட்கள் மிகவும் நேர்த்தியான கலை படைப்பை கொடுக்க முயற்சிக்கும் பொருட்டு பல்வேறு உழைப்பையும் ஆற்றலையும் கொடுப்பார்கள். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகமாகும். இந்த அழுத்தமும் இப்படியான மாரடைப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு காரணமாக அமையலாம். அத்துடன் கே.வி.ஆனந்த் கொரோனா பாசிட்டிவ் என்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. ஒருவேளை கொரோனாவால் உயிர் இழந்திருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சுக்குழாய், நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பார்கள். சிலசமயம் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இப்படி நடப்பதுண்டு. கே.வி.ஆனந்த் மாரடைப்புக்கு, அவருக்கு கொரோனா இருந்த சமயத்தில் ஏற்படுகிற வெளி பாதிப்புகள் உள்ளிட்டவையும் காரணமாக அமையும்.
இதற்குதான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளச் சொல்லி சொல்கிறோம். கொரோனா இருந்தாலும்கூட அவர்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும்போது வரக்கூடிய பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கின்றன. அதற்காக தான் நாங்கள் அனைவரையும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறோம். தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதபோது கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் கொரோனா பாதித்தவர்கள் இப்படியான மாரடைப்பு உள்ளிட்ட மற்ற நோய்களால் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
இது போன்ற விஷயங்களுக்காக தான் ஒரு சின்ன ஜுரம் வந்தாலும் கொரோனா என்று நம்புங்கள் என்று நாங்கள் மக்களிடம் சொல்கிறோம். உடல்நிலை சரியில்லை என்பதை வெளியே சொல்லவே யோசிக்கிறார்கள். உடனடியாக அதை வெளியே தெரியப்படுத்தி மருத்துவரை அணுகி தக்க சிகிச்சையை எடுக்கும் பொருட்டு இந்த கொரோனா நமக்கும் மற்றவருக்கும் பரவாமல் தடுக்க முடியும். நாமும் அதிலிருந்து விரைவில் விடுதலையாக முடியும். ஆனால் மாஸ்க் அணிவதை ஒன்றரை வருடங்களாக மருத்துவர்கள் மட்டுமே செய்து கொண்டிருக்கின்றனர். பலரும் மாஸ்க்கை மூக்குக்கு கீழே போடுகின்றனர். இப்படி பல அளவில் அவற்றை கவனிக்க வேண்டியது இருக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: மறைந்த இயக்குநர் ஜீவாவுக்கும் கே.வி.ஆனந்துக்கும் இத்தனை ஆச்சர்யமூட்டும் ஒற்றுமைகளா?
VIDEO: KV ஆனந்தின் மாரடைப்புக்கான காரணம் இதுவா? விளக்கும் பிரபல மருத்துவர்.. விழிப்புணர்வு பேட்டி! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Lots Of Similarities Btw Late Directors Jeeva And KV Anand
- Some Photos Taken By KV Anand For Tamil Novels
- Vishal Condoles Cinematographer KV Anand Demise
- I Was About To Do Ko Movie Simbu Shares About KV Anand
- RIP KV Anand: Kajal Aggarwal Kitchlu Gets Emotional And Remembers Fond Memories
- When KV Anand Asked Thalapathy 65 Director Nelson Dilipkumar If He Would Act In His Film; Viral Tweet
- STR Reveals About Missing Ko With KV Anand, Another Project Details
- Shankar Emotional Tribute To KV Anand Is Sure To Bring A Tear
- Directors Bala, Samuthirakani Pay Their Last Respect To KV Anand; Heart Melting Visuals
- Director KV Anand Corpse Taken Basant Nagar Funeral Directly
- Rajinikanth Offers His Condolences For Death Of Director KV Anand
- Actor Jiiva Emotional Post KV Anand Demise Shares Ko Still
தொடர்புடைய இணைப்புகள்
- "என்னை பலர் அசிங்கமா கேட்பாங்க ஆனா KV Anand தான்" Show-வில் Emotional ஆன Bayilvan Ranganathan பேட்டி
- 🔴LIVE: RIP KV Anand - க...
- "KV Anand பற்றி Hospital-ல இருந்து வந்த தகவல்" மாரடைப்பு காரணத்தை உடைக்கும் Dr Arunachalam பேட்டி
- RIP KV Anand: "அந்த ஊசி போட்டிருந்தா மாரடைப்பு வந்துருக்காது" - உடைக்கும் Doctor Sabari பேட்டி
- 🔴 KV Anand-க்கு இயக்குனர் பாலா, சமுத்திரக்கனி செலுத்திய இறுதி அஞ்சலி | RIP KV Anand
- 🔴"KV Anand-ஐ பிரிந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு .." - Rajinikanth இரங்கல் | RIP KV Anand
- 🔴Live : KV Anand உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீரோடு செய்த இறுதி சடங்கு | RIP KV Anand
- 🔴Live: கண்ணாடி வண்டியில் KV Anand உடல்... கண்ணீர் அஞ்சலி செலுத்திய குடும்பம் | RIP KV Anand
- 🔴"எதிர்பார்க்கவே இல்ல.. என் நண்பா.." Harris Jayaraj உருக்கம் | RIP KV Anand
- 🔴 Remembering KV Anand: Cinema தெரியலனா நான் எதுக்குமே லாயக்கு இல்லனு அம்மா திட்டுவாங்க! | Throwbac
- 🔴 Remembering KV Anand: என்னவெச்சு பிரமாண்டமா படம் பண்ண 1ST Director - Dhanush Emotional | Throwback
- 🔴Sanitize செய்யப்பட்ட KV.Anand உடல் | Full Video | RIP KV.Anand