www.garudabazaar.com

ஆரி 'கேப்டன்' ஆனதுக்கு பாலாஜி காரணமா?... இதென்ன புது 'உருட்டா' இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று வழக்கம்போல யார் வாரம் முழுவதும் சிறப்பாக செய்தார்கள்? என பிக்பாஸ் கேட்க போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு பேரை நாமினேட் செய்தனர். இதில் ஆரி, சோம், நிஷா மூவரும் கேப்டன் பதவிக்கு போட்டியிட தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து கயிறு இழுப்பது போல போட்டி ஒன்றை பிக்பாஸ் வைத்தார்.

Really Balaji helped for Aari Arjunan in Captain Task?

இதில் நிஷா கீழே விழுந்து விட, சோம் தடுமாற, ஆரி கச்சிதமாக செய்து கேப்டன் பதவியை கைப்பற்றினார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ இந்த வாரம் யாரை நாமினேட் பண்ணுவாங்க? என கிண்டலடித்தனர். இந்த நிலையில் ஆரி கேப்டன் ஆனதுக்கு பாலாஜி தான் காரணம் என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது பாலாஜி சரியாக கயிறை ஆரி உடலில் சுற்றியதால் தான் அவர் கேப்டனாக வெற்றி பெற்றாராம். ரியோ, சம்யுக்தாவை கேப்டனாக மாற்றியது போல ஆரிக்கும் உதவி செய்து பாலாஜி அவரை கேப்டனாக்கினார் என கூறி வருகின்றனர். இதைப்பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இதென்ன புது உருட்டா இருக்கு? நல்லா முட்டு குடுக்குறீங்க என கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Really Balaji helped for Aari Arjunan in Captain Task?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.