'காவல்துறை உங்கள் நண்பன்' - ஸ்டெர்லைட் போராட்டத்தைப் பற்றிய படமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்  ரவீனா முதன்மை வேடத்தில் நடிக்கும் படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. இந்த படத்தை ஆர்டிஎம் இயக்குகிறார்.  மேலும் இந்த படத்தில் சுரேஷ் ரவி ஹீரோவாக நடித்துள்ளார்.

Raveena's Kaavalthurai Ungal Nanban does not speak about Sterlite Issue

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நினைவு கூறும் வகையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் மே 22 ஆம் தேதி வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து  இந்த படத்தின் கதாநாயகியான ரவீனா தெரிவித்ததாவது, இந்த படம் மக்களை எப்படி நடத்துகிறது என்பதை பற்றிய படம். இது படம் ஸ்டெர்லைட் போராட்டத்தை பற்றய படம் அல்ல. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. என்று தெரிவித்தார்.