www.garudabazaar.com
iTechUS

Naan Kadavul Illai : SA சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனியின் ‘நான் கடவுள் இல்லை’..! வெளியான ரிலீஸ் தேதி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் உருவாகியுள்ளது.

SA Chandrasekar Naan Kadavul Illai starring Samuthirakani

நடிகர் சமுத்தரகனி, சாக்ஷி அகர்வால், சரவணன், இனியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் எஸ்ஏசி. இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். மகேஷ்.கே.தேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை பிரபாகர் எடிட் செய்ய, வனராஜ் கலை இயக்குநராக பணிபுரிகிறார். பில்லா ஜகன் சண்டைப் பயிற்சியாளராக பணிபுகிறார். ஏற்கனவே இப்படம் குழந்தைகளை மையமாகக் கொண்ட படம் என எஸ்.ஏ.சந்திரசேகர் குறிப்பிட்டிருந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகியிருந்தது.

SA Chandrasekar Naan Kadavul Illai starring Samuthirakani

இப்படத்தில் சிபி சிஐடி அதிகாரியாக சமுத்திரகனி நடித்துள்ளார். இனியா, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் இவர்களுடன் மிரட்டலான வில்லனாக பிக்பாஸ் சரவணன் நடித்துள்ளார். நடிகை ரேணுகா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஓய்வு பெற்ற வழக்கறிஞராக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் தொடர்பாளர் : சக்தி சரவணன்.

தொடர்புடைய இணைப்புகள்

SA Chandrasekar Naan Kadavul Illai starring Samuthirakani

People looking for online information on Iniya, SA Chandrasekar, Sakshi Agarwal, Samuthirakani will find this news story useful.