"கல்யாண பொண்ணு என்னா அழகு" .. எப்பவும் சுத்தி போடுற ரஷ்மிகாவே கண்ணு வெச்சுட்டாங்களே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஷ்மிகா மந்தனா தன்னுடைய தோழியின் திருமணத்தில் கலந்துகொண்டது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Rashmika overjoyed about her friend wedding

Also Read | கமலின் விக்ரம் படத்தில் இந்த குழந்தை சூர்யா-வா..? Twitter-ல் ரசிகர்கள் Trending பேச்சு!

National crush ராஷ்மிகா…

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party என்ற படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது. 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார்.

தளபதி 66…

சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியால் இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். தொடர் வெற்றிப் படங்களாலும், சமூகவலைதளங்களில் செய்யும் குறும்புகளாலும் ரசிகர்கள் இவரை ‘National crush’ என செல்லமாக அழைத்து வருகின்றனர். இப்போது விஜய்யுடன் தளபதி 66 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Rashmika overjoyed about her friend wedding

தோழியின் திருமணம்…

இந்நிலையில் தனது தோழி ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்டதைப் பற்றிய தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ராஷ்மிகா, அங்கு தனது தோழிகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் பகிர, அவை இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. மேலும் இதுபற்றிய அவரது பதிவில் “என் தோழி ராகிணி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். காலை 4 மணி விமானத்தை தவறவிட்டு, எனது விமானங்கள் 4-5 முறை தாமதமான பிறகு.. கடவுளுக்கு நன்றி, நான் எப்படியோ இறுதியாக அவளுடைய திருமணத்திற்கு வந்தேன்! கடவுளே! என்ன அழகான மணப்பெண்…

Rashmika overjoyed about her friend wedding

எதுவும் மாறவில்லை…

ஆஹா.. என் தோழிகள்.. நான் இவர்களுடன்தான் வளர்ந்தேன்.. நாங்கள் அறிமுகமாகி 17 வருடங்கள் ஆகியும் எதுவும் மாறவில்லை. இவர்கள்தான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள்.. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து ஒரு விஷயத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.. நீங்கள் அனைவரும் ராஷ்மிகாவை அறிவதற்கு முன்பு உங்கள் ராஷ்மிகா இப்படித்தான் இருந்தார், எதுவும் மாறவில்லை!” எனக் கூறியுள்ளார்.

Rashmika overjoyed about her friend wedding

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika overjoyed about her friend wedding

People looking for online information on Friend Wedding Function, Rashmika Mandanna, Rashmika Mandanna Latest Pictures will find this news story useful.