www.garudabazaar.com

ஒரே பாட்டுக்கு பல இடத்தில் குத்தாட்டம் போட்ட ரஷ்மிகா !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடலுக்கு வெவ்வேறு இடத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார் ரஷ்மிகா.

Rashmika dances for samy samy song in different places

கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான ரஷ்மிகா, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். நேஷனல் க்ரஷ் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே உருவாகிவிட்டார். இந்த இரண்டு படத்திலும் இவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rashmika dances for samy samy song in different places

கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்து வெளிவந்த படம் தான் சுல்தான். இது தான் இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது.தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்காத ரசிகர்களே இல்லை. அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களிடையே ஒன்றி போய்விட்டார். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் புஷ்பா திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் செம குஷியில் இருக்கிறார் ரஷ்மிகா.

புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடல் மாஸ் ஹிட் ஆன நிலையில்,பல சினிமா ரசிகர்களும்  இந்த பாடலுக்கு ரீலிஸ் போட்டு சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி கொண்டு இருக்கின்றனர். அதுவும் ரஷ்மிகா வளைந்து ஆடும் குறிப்பிட்ட ஸ்டெப் மட்டும் இன்டர்நெட்டில் ட்ரெண்டாக இருக்கின்றது.

Rashmika dances for samy samy song in different places

இந்த ஸ்டெப் போடும் பல ரீலிஸ் வீடியோக்களை பார்த்த ரஷ்மிக தானும்,அந்த கிளப்பில் இணைய போவதாக கூறி வீட்டில் நடனமாடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அதே போல் எந்த விழாவிற்கு சென்றாலும் ரஷ்மிகாவை டான்ஸ் ஆட சொல்லி கேட்கின்றனர் ரசிகர்கள்.அதனால் பல இடத்தில ஒரே பாடலுக்கு மகிழ்ச்சியாக குத்தாட்டம் போட்டு வருகிறார் ரஷ்மிகா.

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika dances for samy samy song in different places

People looking for online information on Pushpa, Rashmika Mandanna, Samysamy will find this news story useful.