Reliable Software
www.garudabazaar.com

Vj ரக்ஷன் மனைவி இவங்க தானா?.. Behindwoods விழாவில் மனைவி பற்றி என்ன சொல்லுறாரு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர். இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம்.

rakshan emotional about his wife in awards Vj ரக்ஷன் மனைவி இவங்க தானா

விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியின் கடந்த 5, 6, 7 சீசன்களை ஜாக்லினுடன் சேர்ந்து தொகுத்து வந்தவர் ரக்ஷன். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அறந்தாங்கி நிஷா உடன் குக் வித் கோமாளி சீசன் ஒன்னை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் நிஷா பிக்பாஸ் சென்று விட இரண்டாம் சீசனை சிங்கிள் ஆங்கராக தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் துல்கர் சல்மானுடன் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் Most promising star television to Big screen என்ற விருதை அவர்  பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரக்ஷன் சமீபத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் பெண் ஒருவருடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "என் மனைவி. சிறுவயதில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம். பத்து வருடத்திற்கு முன்பு அவளுடன்" என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதுவரை ரக்ஷன் திருமணம் ஆகாதவர் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். இந்நிலையில் ரக்ஷனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? போன்ற கேள்விகளை தொடுத்து வந்தனர். இந்நிலையில் ரக்ஷன் முதல் முறையாக தனது மனைவியை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த Behindwoods அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் அவர் பங்கேற்றுள்ளார். மனைவியை பற்றி Emotional ஆன ரக்ஷன் பேசிய வார்த்தைகள் இதோ..!

VJ ரக்ஷன் மனைவி இவங்க தானா?.. BEHINDWOODS விழாவில் மனைவி பற்றி என்ன சொல்லுறாரு பாருங்க..! வீடியோ

Tags : Rakshan

rakshan emotional about his wife in awards Vj ரக்ஷன் மனைவி இவங்க தானா

People looking for online information on Rakshan will find this news story useful.