www.garudabazaar.com

வெப் சீரிஸில் களமிறங்கிய ரஜினியின் 'பாஷா' பட இயக்குநர்.. பிரபல ஓடிடியில் வெளியானது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

Rajini Baasha Director Suresh Krissna produced web series

கமலுக்கு ' சத்யா' , ரஜினிக்கு 'பாட்ஷா', ரகுமானுக்கு 'சங்கமம் ' என்று இவரது வெற்றிப்படங்களின்  பட்டியல் நீளும். இதுவரை சுமார் 40 படங்கள் இயக்கியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, சின்னத்திரையிலும் கோலோச்சினார். சன்,விஜய் போன்ற முன்னணித் தொலைக்காட்சிகளில் தொடர்களை இயக்கியுள்ளார். அதிலும் சன் டிவியில் இவர் இயக்கிய 'மகாபாரதத்தை' குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

Rajini Baasha Director Suresh Krissna produced web series

இந்நிலையில் தான் இப்போது வெப் சீரீஸ் தளத்திலும் இறங்கி இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. ஆம், 'இன் த நேம் ஆப் காட் 'என்ற பெயரில் இந்த வெப்சீரிஸ் தெலுங்கில் உருவாகி இருக்கிறது. அதாவது 'கடவுளின் பெயரால்' என்ற பொருளில் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.  பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடிப்பில்  உருவாகியுள்ள இந்த சீரிஸை எழுதி இயக்கி இருப்பவர் வித்யாசாகர் முத்துக்குமார். இந்த வெப் சீரிஸ்க்கு வருண் ஒளிப்பதிவு செய்ய, நிகில் ஸ்ரீகுமார் எடிட்டிங் செய்துள்ளார்.  தீபக் அலெக்சாண்டர் இசையமைத்துள்ளார்.

ALSO READ: டாப்ஸி நடிக்கும் பயோபிக்கில் பரபரப்பு! திடீரென மாற்றப்பட்டுள்ள இயக்குநர்! வைரல் ட்வீட்!

இதுபற்றி பேசியுள்ள இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் தான் இந்த வெப்சீரீஸ். இந்தப் புதிய தளத்தின் மீது  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனக்கு ஈர்ப்பு வந்தது. நல்ல எதிர்காலம் உள்ள ஒரு தளமாக இது பட்டது. அதே நேரத்தில் சினிமா படம், தொலைக்காட்சி தொடர்கள் உருவாக்குவதில் இல்லாத சுதந்திரமும், காட்சி பிரமாண்ட சாத்தியமும்  இந்த வெப்சீரீஸ் தளத்தில் உள்ளது. எந்த சமரசங்களும் இல்லாமல் நினைத்ததை  அப்படியே இதில் கொண்டுவரமுடியும். இப்படித்தான் 'இன் த நேம் ஆப் காட் ' சீரீஸை நான் தயாரித்து இருக்கிறேன். ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அதே பலத்தோடு அதையும் மீறிய காட்சி பிரமாண்டத்தோடு இதை உருவாக்கி இருக்கிறோம். இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி போன்ற நகரங்களிலும் காடுகள், ஆறுகள் போன்ற இடங்களிலும் பல ஷெட்யூல் போட்டு எடுத்தோம்.

ஏராளமான நடிகர்களோடும் பெரும் மக்கள் கூட்டத்தோடும் படப்பிடிப்பு நடத்தி இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. எனக்கு இதில் ஈடுபட ஆர்வம் இருந்தாலும் ஈடுபடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அல்லு அர்ஜுன் தான் எனக்கு ஊக்கமூட்டினார். அவர் தான் எனக்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுத்தவர். அந்த வகையில் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

Rajini Baasha Director Suresh Krissna produced web series

ஓர் அப்பாவி மனிதன் எந்த வம்பு தும்புக்கும் செல்லாதவன் சமூக அழுத்தத்தாலும் மக்களது நெருக்குதலாலும் எப்படி வன்முறைப் பாதைக்கு தள்ளப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறான் என்பது கதை. அந்த வன்முறை உலகத்தில் விழுந்தவன் ,எப்படி அதை எதிர்கொள்கிறான் என்பதே திரைக்கதையில் காட்சிகளாக வரும். அதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் பிரபலமான பிரியதர்ஷி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவரின் இன்னொரு முகமாக வேறுவகை நடிப்பு வெளிப்பட்டுள்ளது. அவரது நடிப்புக்கு பெரும் தீனியாக இந்த வெப்சீரீஸ் இருக்கும்.

Rajini Baasha Director Suresh Krissna produced web series

இதன் டீசர் ஒரு மில்லியன் பார்வையாளர்களை விரைவில் கடந்தது. இந்த மாபெரும் வரவேற்பு இதற்கான முதல் வெற்றி அறிகுறியாகும். ஒரு தயாரிப்பாளராக இதில் நான் பெருமைப்படுகிறேன். இயக்குநராக இத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும் தயாரிப்புக்கு இந்தத் தளத்தில் நான் புதியவன். முதல் முயற்சி பெரிய வெற்றியாக அமைந்தது மகிழ்ச்சி.  'இன் த நேம் ஆப் காட்' வெப்சீரீஸ் 'ஆஹா ஒரிஜினல் 'ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது” என கூறியுள்ளார்.

ALSO READ:  "என் BioPic-ல இவர் நடிச்சா செம்மயா இருக்கும்!"... பிரபல தமிழ் ஹீரோ பேரை சொன்ன 'நம்ம' சின்ன தல 'ரெய்னா'!

இந்த சீரிஸ் ஜூன் 18- ஆம் தேதி முதல் 'ஆஹா ஒரிஜினல் 'ஓடிடியில் தெலுங்கில் வெளியாகி உள்ளது. அதன் வரவேற்பைப் பொறுத்துப் பிற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Rajini Baasha Director Suresh Krissna produced web series

People looking for online information on Aha, Inthenameofgod, OTT, Suresh krissna, Web Series will find this news story useful.