தமிழ் படத்தில் நடிக்கும் பாலிவுட் ரியல் ஜோடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஓம் சினி வென்ச்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘காபி’ திரைப்படத்தில் நிஜ ஜோடியான ராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே இணைந்து நடிக்கவுள்ளனர்.

Rahul Dev and Mukdha Godse for Coffee, which stars Ineya in the lead

நடிகை இனியா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சவுந்தரராஜன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ராகுல் தேவ் நடிக்கிறார். இவரது குழுவில் ஒருவராக அவரது மனைவி முக்தா கோட்சே நடிக்கிறார்.

நடிகர் ராகுல் இறுதியாக அஜித் நடித்த ‘வேதாளம்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதேபோல் நடிகை முக்தா கோட்சேவும், ‘தனி ஒருவன்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமியின் காதலியாக நடித்திருந்தார்.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண் இளம் வயதில் தனது பெற்றோரை இழந்து கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறி தனது தம்பியையும் வளர்த்து ஆளாக்குகிறாள். இனி வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்று எண்ணிய நேரத்தில் எதிர்ப்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறாள் என்பதை சமூக அக்கறையுடன் இப்படத்தில் கூறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வெங்கட் நாத் இசையமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.