www.garudabazaar.com

சூர்யா தயாரிப்பில் பிக்பாஸ் நாயகி நடிக்கும் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு! வெளியான டிரைலர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து, தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் அமேசான் ப்ரைமுடனான ஒப்பந்தப்படி செப்டம்பர் மாதம் முதல், மாதம் ஒரு படம் என அடுத்தடுத்த 4 மாதங்களுக்கு 4 திரைப்படங்களை வெளியிடுகிறது.

Raame Aandalum Raavane Aandalum Suriya Prime release

அதன்படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இப்படத்தின் டிரைலரை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம், ஒரு கிராமத்து வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் திரைப்படம். 

மனிதநேய உணர்வுகளை கொண்டு, நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கும், இத்திரைப்படத்தில் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்ட பிரபல நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார், ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இதேபோல், 'ஜெய்பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த மாதங்களில், மாதம் ஒரு படம் என அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளன. 

Also Read: அடடே.. நம்ம சிவகார்த்திகேயன்.. யார் வீட்டு விசேஷத்துக்கு வந்துருக்காரு பாருங்க.. Viral ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Raame Aandalum Raavane Aandalum Suriya Prime release

People looking for online information on Amazon Prime Video, Ramya Pandian, Suriya will find this news story useful.