RRR Others USA
www.garudabazaar.com

#jamesinott: புனீத் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி நியூஸ்… பிரபல ஓடிடி கொடுத்த update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புனீத் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் sony liv தளத்தில் வெளியாக உள்ளது.

Puneeth last movie james ott release date announced

திடீரென்று வீட்டுக்கு வந்த JP… மாட்டுவாரா அசோக் செல்வன்? – வைரல் மன்மத லீலை sneak peek

புனீத்தின் திடீர் மறைவு…

கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனீத்தின் இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவ ராஜ்குமாரின் தம்பியுமாவார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Puneeth last movie james ott release date announced

கடைசிப் படம் …

புனீத் மறைவதற்கு முன்னர் அவர் நடிப்பில் கடைசியாக உருவான படம் ஜேம்ஸ். இந்த படம் மார்ச் 17 அன்று புனீத்தின் பிறந்த நாளில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் புனித்துக்கு பதிலாக அவரது அண்ணன் சிவராஜ் சிவகுமார் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தில் புனித்தோடு சரத்குமார், பிரியா ஆனந்த், ஸ்ரீகாந்த் மற்றும் அனு பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். சேத்தன் குமார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. கர்நாடகாவில் அதிகளவில் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. பல திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்து எமோஷனலாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர்.

Puneeth last movie james ott release date announced

ஜேம்ஸ் ஓடிடி வெளியீடு….

இந்நிலையில் இப்போது ஜேம்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Sony liv தளத்தில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கன்னடா, மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள புனீத்தின் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். Sony liv பகிர்ந்துள்ள இந்த அறிவிப்பு இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Puneeth last movie james ott release date announced

#beasttrailerfromapril2: நீங்களும் வெயிட்டிங்கா?... ரசிகர்களை குஷியாக்கிய செல்வராகவனின் வைரல் post!

தொடர்புடைய இணைப்புகள்

Puneeth last movie james ott release date announced

People looking for online information on Chethan Kumar, James, James in OTT, OTT Release, Puneeth, Puneeth last movie will find this news story useful.