www.garudabazaar.com

Breaking : தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. வெளியான முக்கிய விவரங்கள்... நீதிமன்றம் உத்தரவு என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் குறித்து முக்கிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிவிப்பு | Producers council election date announced

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான தேதி மற்றும் மற்றைய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சென்னை உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட, தேர்தல் அதிகாரி எம்.ஜெயச்சந்திரன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிவிப்பு | Producers council election date announced

அதன்படி வரும் நவம்பர் மாதம் 22-ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்கவுள்ளது. சென்னை அடையாரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அட்டவணை..., வேட்புமனு விண்ணப்ப படிவம் வழங்கும் நாள்:- அக்டோபர் 15 காலை 11மணி முதல், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்:- அக்டோபர் 23, வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்:- அக்டோபர் 24, இறுதி வேட்பாளர் பட்டியல்:- அக்டோபர் 29, தேர்தல் நாள் நவம்பர் 22 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிவிப்பு | Producers council election date announced

People looking for online information on Producer Council Election will find this news story useful.