www.garudabazaar.com

தனுஷ் படம் OTT ரிலீஸ்-ஆ..?! - தயாரிப்பாளர் அதிரடி Statement.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் படத்தின் ரிலீஸ் குறித்து அதன் தயாரிப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தனுஷ் படம் பற்றி தயாரிப்பாளர் ட்வீட் | Producer Sashikanth opens on dhanush's jagame thanthiram release

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜொஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை Ynot Studio நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மே 1 ரிலீஸ் ஆக வேண்டிய இத்திரைப்படம் தள்ளிப்போனது.

தனுஷ் படம் பற்றி தயாரிப்பாளர் ட்வீட் | Producer Sashikanth opens on dhanush's jagame thanthiram release

இந்நிலையில் தற்போது ஜகமே தந்திரம் OTT-ல் வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது. இதை தொடர்ந்து தற்போது படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், ''ஜகம் இன்னும் தயாராகி கொண்டுதான் இருக்கிறது. இன்னும் நார்மல் ஆகவில்லை. அதனால், தியேட்டர்கள் திறக்கும் வரை, பொறுமையாக காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள். எங்கள் மொத்த படக்குழுவும், தனுஷ் பெரிய ஸ்க்ரீனில் ரகிட ரகிட ஆடுவதையே விரும்புகிறோம்'' என அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் படம் பற்றி தயாரிப்பாளர் ட்வீட் | Producer Sashikanth opens on dhanush's jagame thanthiram release

People looking for online information on Dhanush, Jagame Thanthiram, Karthik Subbaraj, S Sashikanth will find this news story useful.