www.garudabazaar.com

“நீங்க சொல்லிட்டு பண்ணீங்களா?”.. தலைவர் போட்டியில் மோதிக்கொண்ட பிரியங்கா - தாமரை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் அண்மையில் அபிஷேக் மீண்டும் உள்ளே நுழைந்துள்ளார். இசைவாணி கடைசியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த கேப்டனாகும் போட்டி அறிவிக்கப்பட்டது.

priyanka thamarai selvi heated argument in cotton task

அதன்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் அதிக எடையிலான பஞ்சை சேகரிப்பவர்கள் இந்த டாஸ்கில் வெல்வார்கள். அவர்கள் மற்ற போட்டியாளர்களின் ஏகோபித்த தீர்மானத்தால் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில் தாமரையை கேப்டனாக தேர்ந்தெடுக்கும் பேச்சு வந்தது.

அப்போது, “கேப்டன் ஆனால் என்ன செய்வ?” என தாமரையை பார்த்து, பிரியங்கா கேட்டதுமே தாமரைக்கு கோபம் வந்துவிட்டது. அதே கோபத்துடன் அதிக சத்தத்தில், பிரியங்காவை நோக்கி, “நீங்க சொல்லிட்டு பண்ணீங்களா?” என்று தாமரை கேட்டார்.

அதன் பிறகு பிரியங்கா, தாமரை தான் தானாக வீட்டு வேலைகளை செய்வதாகவும், மற்றவர்கள் செய்வதில்லை, கேப்டன் மட்டுமே அந்த வேலை செய்யக் கூடாது. மற்றவர்களும் செய்ய வேண்டும். தாமரை நிறைய சிக்கலில் உள்ளார். அதில் இருந்து வெளியேறி, அடுத்த வாரம் கேப்டன் ஆகட்டும் என்றார்.

இதனிடையே சிபி, நிரூப் உள்ளிட்டோர் தாமரைக்கு சப்போர்ட் செய்து பிரியங்காவிடம் வாதம் செய்தனர். இறுதியில் தாமரை ரிஜக்ட் செய்யப்பட்டார். அதற்கு பிரியங்காவிடம் பதில் கூறிய நிரூப், “உன் பிடிவாதம் மட்டுமே அவளை ரிஜக்ட் பண்றதுக்கு காரணம்” என்றார்.

priyanka thamarai selvi heated argument in cotton task

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil BiggBossTamil5 BB BiggBoss4 PromoBiggBossSeason5 BB5 BiggBoss VijayTV VijayTelevision StarVijayTV StarVijayTamilTV RedefiningEntertainment BiggBoss BiggBossTamil KH Kamal KamalHaasan UniversalHero Eviction Nomination, BiggBossTamil5, Priyanka, Thamaraiselvi will find this news story useful.