“சங்கீதா விஜய் life time சப்போர்ட்”!.. இயக்குநரின் சிறுவயது ஃபோட்டோவை பகிர்ந்த மனைவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜா ராணி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் அட்லீ.

priyaa shares atlees childhood pic and about sangeetha vijay

தேர்ந்த கமர்ஷியல் படங்களை இயக்கி வரும் அட்லீ விஜய் நடிப்பிலேயே 3 மெகா ஹிட் பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர். இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் ஷாருக் கானை இயக்கவுள்ளார்.

இவரது மனைவியும் நடிகையுமான ப்ரியா அட்லீ மிகவும் பிரபலம். அவ்வபோது சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடும் அவர் தற்போது ரசிகர்களுடனான கேள்வி பதிலில் அட்லீயின் சிறுவயது புகைப்படத்தையும், அட்லீயுடன் முதல் முதலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்காக பகிர்ந்துள்ளார். மேலும் ”சங்கீதா (தளபதி விஜய் மனைவி) அக்கா எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையானவர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அட்லீயின் திரைப்படங்களில் தனக்கு பிடித்த பாடல் பிகில் படத்தில் வரும், ‘சிங்கப்பெண்ணே’ பாடல் என்றும், அட்லீயின் திரைப்படங்களில் தனக்கு பிடித்த படம் ‘மெர்சல்’ என்றும் கூறியுள்ளார்.

அப்போது ஏன்  ‘பிகில்’உங்களது விருப்பமான திரைப்படம் இல்லை? என ஏஜிஎஸ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கேட்க, அதற்கு ப்ரியா, “அர்ச்சு... பிகில் திரைப்படம் நீங்கள் இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான படம்” என க்யூட்டாக குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: "அதிர்ச்சி".. நடக்கவிருந்த 'திருமணத்தை முறித்துக் கொள்வதாக' அறிவித்த இளம் நடிகை!

priyaa shares atlees childhood pic and about sangeetha vijay

People looking for online information on Atlee, Atlee Kumar, PriyaAtlee will find this news story useful.