இது சூப்பர்ல.. கணவர் பெயரோடு தன் பெயரை எழுதி LOVE LOCK செய்த பிரபல நடிகை! வைரல் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை பிரணிதா சுபாஷ்.

Images are subject to © copyright to their respective owners.
தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை பிரணிதா சுபாஷ் அறிமுகமானார்.
அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தின் பாடலால் மிகவும் பெயர் பெற்றார்.
அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படத்தில் நடித்த பிரணிதாவுக்கு தமிழ் நாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பின்னர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners
திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் பிரணிதா நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனக்கு பெண் குழந்தை பிறந்தது என அறிவித்தார். குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
அதன் பின்னர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா தற்போது ஆஸ்திரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தமது கணவர் நிதின் பெயருடன் தனது பெயரை எழுதி புகழ் பெற்ற Salzburg Love Lock பாலத்தில் பூட்டி சாவியை Salzach ஆற்றில் விட்டெறிந்தார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது.