பிரபல இளம் டிவி நடிகை தற்கொலை - வெளியான பரபரப்பு காரணம் - ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலங்களின் மரண செய்திகள் மேலும் சோகத்தை உண்டாக்கி வருகின்றன.
![Popular Young TV actress commit suicide ft Sravani Kondapalli | பிரபல இளம் டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை Popular Young TV actress commit suicide ft Sravani Kondapalli | பிரபல இளம் டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-young-tv-actress-commit-suicide-ft-sravani-kondapalli-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் பிரபல நடிகை ஷ்ரவானி கொன்டபள்ளி நேற்று (09/09/2020) இரவு ஹைராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த செய்தி ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷ்ரவானி தெலுங்கு சீரியல்களான 'மனசு மமதா', 'மௌனராகம்' உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வந்தார். நடிகையின் தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷ்ரவானியின் குடும்பத்தினர் தேவராஜ் ரெட்டி என்பர் மீது அவரை துன்புறுத்தி தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.