பிரபல விஜேவிடம் கையும் களவுமாக சிக்கிய ஹஸ்பண்டு– ’எப்டி நான் இல்லாதப்ப என் ஃபோன…’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் அடைந்தவர் விஜே  அஞ்சனா. அவர் தொகுத்து வழங்கிய பாடல் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அடிக்ட் ஆக இவருக்கென்று ஒரு தனி பட்டாளமே உருவானது.

Popular VJ Television anchor Anjana Rangan tweets to her husband

புகழின் உச்சத்தில் இருந்த சமையம் அவர் சந்திரமவுலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சந்திரமெளலி,  பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் நாயகனாக நடித்தவர் ஆவார். தற்போதும் தொலைக்காட்சி ஆங்கரிங்கை தொடர்ந்து வரும் அஞ்சனா பதிவிடும் புகைப்படங்களும், ட்வீட்டுகளும் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று முந்தினம் ’மை ஹஸ்பண்ட் இஸ் மை கண்கண்ட தெய்வம்’ என்று அவர் ட்வீட் செய்திருந்தார். மறுநாள் அதை ரீட்வீட் செய்துள்ள அஞ்சனா தன் கணவனை டேக் செய்து: எப்படி நான் இல்லாதப்ப என் ஃபோனை எடுத்து பயன்படுத்தலாம். மவனே நான் இத உனக்கு திரும்ப பண்ணுவேன் என்று ட்வீட் செய்துள்ளார். இந்த Funஆன ட்வீட்டுக்கு லைக்குகளும் கமண்டுகளும் குவிந்து வருகின்றன்ன.

Entertainment sub editor