பிரபல விஜய் டிவி நடிகைக்கு திருமணம் முடிந்தது... வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்தனது டிக்டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தவர் வைஷ்ணவி ராஜசேகரன். பலருக்கும் பரிட்சயமானவர். இவர் கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின்சேன் போல நடித்தது மிகவும் பிரபலமடைந்தது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'காற்றின் மொழி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகை வைஷ்ணவி திருமணம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடந்துள்ளது. அவர் சாய் விக்னேஷ்வர் என்பவரை திருமணம் முடித்துள்ளார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கிரியேட்டிவ் ஹெட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களும், நண்பர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.