Reliable Software
www.garudabazaar.com

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட சன் மியூசிக் விஜே... என்னமா டான்ஸ் ஆடுறாங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அதே போல் மிகவும் நலிவுற்றிருந்த திரையரங்குகள் மற்றும் அதன் சார்ந்த தொழில்களை மாஸ்டர் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

popular Sun music vj vaathi coming dance செம குத்தாட்டம் போட்ட பிரபல விஜே

அதிலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' பாடல் மிகவும் பிரபலம். அனிருத் இசையமைத்த இப்பாடல் ரிலீஸூக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாஸ்டரின்  வாத்தி கம்மிங் பாடலுக்கு அந்த பிரத்தியேக ஸ்டெப் போட்டு வெளியிட்ட வீடியோக்கள் பலவும் வைரலானது. இந்நிலையில் சன் மியூசிக்கில் 10 வருடங்களுக்கும் மேல் தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே அஞ்சனா. இவருக்கு அறிமுகம் என்பது தேவை இல்லை. ஏனென்றால் சன் மியூசிக் என்று சொன்னாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வருபவர்கள் அஞ்சனா மற்றும் மணிமேகலை தான். இந்நிலையில் நீண்ட வருடங்கள் சன் மியூசிக்கில் பணியாற்றிய அவர் பிரபு சால்மன் இயக்கத்தில் 'கயல்' படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்திரனை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட விஜே அஞ்சனாவின் வைரல் வீடியோ இதோ..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popular Sun music vj vaathi coming dance செம குத்தாட்டம் போட்ட பிரபல விஜே

People looking for online information on Anjana, Vaathi coming, Vijay will find this news story useful.