பிரபல சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நலக் குறைவால் இன்று (அக்.11) காலமானார்.

Popular Saxophonist Kadri Gopalnath passes away

இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘டூயட்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களிலும் சாக்ஸபோன் கருவியை வாசித்து கத்ரி கோபால்நாத் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இது தவிர ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் கலை நிகழ்ச்சி தவறாமல் இடம்பெறும்.

சாக்ஸபோன் இசையில் உச்சம் தொட்ட கத்ரி கோபால்நாத் தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, சாக்ஸபோன் சாம்ராட், நாத கலாநிதி, சங்கீத வாத்திய ரத்னா, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்ரி கோபால்நாத் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு கர்நாடகாவில் உள்ள பாதவிங்கடி என்ற இடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்ரி கோபால்நாத்தின் மறைவு தென்னிந்திய திரையுலகிற்கு பேரிழப்பு என பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.