'மெர்சல்' பட தயாரிப்பாளர் 'தேனாண்டாள்' முரளிக்கு என்ன ஆச்சு?.. வெளியான முழு விபரம்!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் விஜய் நடித்த மெர்சல் படம் உட்பட பல முன்னணி நடிகர்களையும், இயக்குநர்களையும் கொண்டு பல வெற்றிப்படங்களை தந்த மாபெரும் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் உரிமையாளரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமானவர் என்.இராமசாமி என்கிற முரளி ராமநாராயணன். பிரபல பழம்பெரும் இயக்குநர் ராம நாராயணனின் மகனான இவர் தேனாண்டாள் முரளி என்று திரைத்துறை வட்டாரத்தில் அறியப்படுபவர். இந்நிலையில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில், "ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான என்.இராமசாமி என்கிற முரளிராமநாராயணன் அவர்களுக்கு இதயத்தில் கண்டறியப்பட்ட அடைப்பு நீக்கப்பட்டு ஆண்டவன் அருளால் நலமாய் இருக்கிறார்" என விஜயமுரளி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: பெரும் அதிர்ச்சி!!.. விவேக், பாண்டுவைத் தொடர்ந்து பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!