பெரும் அதிர்ச்சி!!.. விவேக், பாண்டுவைத் தொடர்ந்து பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!
முகப்பு > சினிமா செய்திகள்திரைத்துறையில் தொடர்ந்து நிகழக்கூடிய மரணங்கள் ரசிகர்களை மட்டுமில்லாமல், திரை துறையினரையும் பெரிய அளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.

அந்த வகையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர்கள் எஸ்.பி. ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோரின் மரணம் ஒருபுறம் கலங்க வைத்தது. இன்னொருபுறம் நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு உள்ளிட்டோரின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், இந்த மரணங்களின் தாக்கத்தில் இருந்து இன்னும் யாரும் மீளாத நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணமடைந்துள்ளார். இந்த செய்தி, தமிழ் திரைத் துறையை உலுக்கி இருக்கிறது. நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா, மறைந்த நடிகர் விவேக்குடன் ரன் திரைப்படம் உட்பட பல படங்களில் காமெடி செய்து அசத்தினார்.
இதேபோல் நடிகர் வடிவேலுவுடன் பல காமெடிகளில் நடித்திருக்கிறார். இப்படி முன்னணி நட்சத்திரங்களுடன் வலம் வந்து கொண்டிருந்த நெல்லை சிவா, இன்று மாலை 6 மணி அளவில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது இறுதிசடங்குகள் நாளை நண்பகலில் நடக்குறது. இவருடைய மறைவு ஏற்படுத்தியுள்ள சோகம் திரைத்துறையை இன்னும் மீளா துயரில் ஆழ்த்தி இருக்கிறது.