பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஸ்ரீராம் மறைவு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 04, 2019 01:15 PM
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அனைவர் மத்தியிலும் பரவலாக அறியப்படுபவர் எஸ்.ஸ்ரீராம். இவர் மணிரத்னத்துடன் இணைந்து ஆலயம் புரொடக்ஷன் என்ற பெயரில் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.

அவற்றில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி நடித்த 'பம்பாய்', 'திருடா திருடா', விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்', அஜித் நடித்த 'ஆசை', சரத்குமார் நடித்த 'தசரதன்' உள்ளிட்ட படங்கள் இவரது தயாரிப்பில் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில் இவர் இன்று (செப்டம்பர் 4) உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 64. அவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
Tags : S Sriram, Aalayam Production