www.garudabazaar.com

'வலிமை' பட பிரபலத்தின் குழந்தை பருவ போட்டோ வைரல்.. யாரா இருக்கும்னு Guess பண்ணுங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா 'அரவிந்தன்' திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படம் பிப்ரவரி 28 1997 ஆம் ஆண்டு வெளியானது. கடந்த 23 வருடங்களாக எண்ணற்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வளம் வருகிறார்.

popular music director childhood photo goes viral

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து ஜானர் படங்களுக்கும் இசையமைத்த பெருமை அவருக்கு உண்டு. அனைத்திலும் உச்சம் தொட்டவர் அவர். அவருக்கென்று வெறித்தனமான தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக அவரது குரலுக்கு. இந்நிலையில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

யுவன் தற்போது தல அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் பொம்மை, ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

popular music director childhood photo goes viral

People looking for online information on Yuvan Shankar Raja will find this news story useful.