RIP : பிரபல நட்சத்திரத்தின் திடீர் மறைவு.. சோகத்தில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்.
முகப்பு > சினிமா செய்திகள்கேன்சர் நோயுடன் போராடி வந்த பிரபல நட்சத்திரத்தின் மறைவு, அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்திரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
![பிரபல நட்சத்திரம் கேன்சரால் மறைவு | Popular model simar gugal passed away battling cancer பிரபல நட்சத்திரம் கேன்சரால் மறைவு | Popular model simar gugal passed away battling cancer](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-model-simar-gugal-passed-away-battling-cancer-news-1.jpg)
பாலிவுட்டில் பிரபல மாடலாக கலக்கி வந்தவர் சிமார் டுகல். திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு, இவர் மாலடிங் உலகில் அடியெடித்து வைத்து, பிரபலமாகி ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் ஃபேஷன் உடைகளை வடிவமைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்த்திரங்களுக்கும் இவர் பிரத்யேக உடைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மாடலும் ஃபேஷன் டிசைனருமான சிமார் டுகல் காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக நீண்ட நாட்களாக கேன்சர் நோயுடன் போராடி வந்த இவர், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இயற்கை எய்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பிரபலங்களும் அவரின் மறைவுக்கு உருக்கமான இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.