A FILM BY ’BLUE சட்டை’ மாறன் – பிரபல திரை விமர்சகரின் இயக்குநர் அவதாரம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 22, 2019 07:28 PM
தன் திரைப்பட விமர்சனங்கள் மூலம் தனக்கென்று தனி பார்வையாளர்களை உருவாக்கி வைத்திருப்பவர் ’ப்ளூ சட்டை’ மாறன். திரைப்பட விமர்சகர்கள் தற்போது சினிமாவுக்கு என்ட்ரி தந்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

’வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ்’ சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்துக்கு ’புரடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயர் சூட்டி உள்ளனர். ’ப்ளூ சட்டை’ மாறன் இயக்கும் இந்த படத்தில் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி நேற்று (21.12.2019) முடிவடைந்துள்ளது.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. சுரேஷ் காமாட்சி இது தவிர எஸ்டிஆர் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘மாநாடு’ படத்தை தயாரித்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
#vhouseproductions 's next project #ProductionNo5 wth #BlueSattaiMaran started shoot on sep 13th and wrapped yesterday dec 21st. @tamiltalkies @Vetrikumaran7 @praveen4joe. @NaganathaSethu3 @johnmediamanagr pic.twitter.com/gTGI27YHRN
— sureshkamatchi (@sureshkamatchi) December 22, 2019