'திரௌபதி' பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் குக் வித் கோமாளி பிரபலம்..!
முகப்பு > சினிமா செய்திகள்பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான படம் 'திரௌபதி'. ஒரு தரப்பு இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் மக்கள் சிலர் ஆதரவு தெரிவிக்க படம் வசூல் ரீதியாக வரவேற்பு கண்டது.இந்த படத்தை பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கி இருந்தார். இதில் நடிகர் ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி-யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
![Popular Cooku with Comali contestant joins mohan G film Popular Cooku with Comali contestant joins mohan G film](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-cooku-with-comali-contestant-joins-mohan-g-film-photos-pictures-stills.jpg)
மோகன்ஜி மற்றும் ரிச்சர்ட் மீண்டும் இணையும் அடுத்த படத்திற்கு ருத்ரதாண்டவம் என்று பெயரிடப்பட்டுள்ளது இது பற்றி முன்பு மோகன் ஜி கூறும் பொழுது " 'திரௌபதி' என்ற கடவுள் பெயரைத் தலைப்பாக வைத்தது தான், பலருக்கும் என் மீது காழ்ப்புணர்ச்சி வரக் காரணம் என்று நினைக்கிறேன்... எனது அடுத்த படத்தின் தலைப்பும் ஒரு கடவுள் பெயர் தான்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் பிரபலம் ஒருவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஆம் தர்ஷா குப்தா தான் இந்த படத்தின் ஹீரோயின் என்று அவர் அறிவித்துள்ளார்.
#ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக #தர்ஷாகுப்தா அவர்கள் அறிமுகம் ஆகிறார்.. pic.twitter.com/7RgcMtcJfC
— Mohan G Kshatriyan 🔥 (@mohandreamer) December 18, 2020