பிரபல டிவி தொகுப்பாளர் தனது மகளை ரசிகர்களுக்கு காட்டிய நெகிழ்ச்சியான தருணம்!
முகப்பு > சினிமா செய்திகள்இந்திய தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமானவர் கபில் சர்மா. சோனி தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் காமெடி ஷோ தொகுப்பாளராக மட்டுமல்லாமல், கிஸ் கிஸ்கோ பியார் கரூன் மற்றும் ஃபிராங்கி உள்ளிட்ட படங்களில் நடித்தும் பிரபலமாகியுள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கின்னி சட்ரத் (Ginni Chatrath) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இத்தம்பதியினருக்கு கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கபில் சர்மா தனது மகளின் புகைப்படத்தை முதல் முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எங்களது இதயத்தின் ஒரு பகுதியை பாருங்கள் அனயிரா சர்மா (Anayra Sharma ) என்று குறிப்பிட்டுள்ளார்.
Meet our piece of heart “Anayra Sharma” ❤️ 🙏 #gratitude pic.twitter.com/2z1dNco7Iz
— Kapil Sharma (@KapilSharmaK9) January 15, 2020