www.garudabazaar.com

RIP - பிரபல சினிமா கலைஞர் மரணம் அடைந்தார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனினும் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டு நாளுக்கு நாள் துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாது உலகம் முழுதும் இருக்கும் கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதும் 2020-ம் ஆண்டின் சூழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு துக்க செய்தி வெளியாகியுள்ளது.

Popular cinema technician died at hyderabad பிரபல சினிமா தொழில்நுட்ப கலைஞர் மரணம்

பிரபல தொழில்நுட்ப கலைஞரான எடிட்டர் கோலா பாஸ்கர் தற்போது மரணம் அடைந்துள்ளார். இயக்குனர் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற பல படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். மேலும் விஜய்யின் போக்கிரி மற்றும் வில்லு படங்களுக்கும் எடிட்டர் இவரே. இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Popular cinema technician died at hyderabad பிரபல சினிமா தொழில்நுட்ப கலைஞர் மரணம்

People looking for online information on Dhanush, Kola bahskar, Vijay will find this news story useful.