www.garudabazaar.com

பல விருதுகளை வென்ற மூத்த நடிகர் காலமானார்.. திரைத்துறையினர் ரசிகர்கள் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் காலமான தகவல் தெரிய வந்துள்ள நிலையில், திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரபல நடிகர் காலமானார் | Popular bengal actor soumitra chatterjee passed away

பெங்கால் மொழியில் புகழ்ப்பெற்ற நடிகராக அறியப்படுபவர் சௌமித்ர சட்டர்ஜி. உலக அளவில் பேசப்பட்ட சத்யஜித் ரேவின் படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் இந்திய அளவில் உயரிய விருதுகளான தேசிய விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார். 

பிரபல நடிகர் காலமானார் | Popular bengal actor soumitra chatterjee passed away

இந்நிலையில் தற்போது நடிகர் சௌமித்ர சட்டர்ஜி காலமாகியுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி கொரோனா வைரஸ் பாசிட்டீவ் காரணமாக மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து இவர் ஒரு மாதகாலமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து பல்வேறு திரைத்துறையினர் தொடங்கி, ரசிகர்கள் வரை சௌமித்ர சட்டர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

பிரபல நடிகர் காலமானார் | Popular bengal actor soumitra chatterjee passed away

People looking for online information on Soumitra Chatterjee will find this news story useful.