www.garudabazaar.com

சமீபத்தில் குழந்தை பிறந்திருந்த நிலையில் நடிகை உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Popular Actress total family affected corona ft Koel Mallick | பிரபல நடிகையின் குடும்பம் கொரோனாவால் பாதிப்பு

இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவர்கள் நலம் பெற வேண்டி சமூக வலைதள பக்கங்கள் மூலம் கருத்து தெரிவித்தனர். மேலும் நடிகர் அனுபம் கேர் தனது அம்மாவிற்கு கொரோனா பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படி பிரபலங்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெங்காலி நடிகை கோயல் மாலிக்கிற்கு கொரோனா பாதித்துள்ளதாம்.

மேலும் அவரது அப்பாவும் நடிகருமான ரஞ்சித் மாலிக் , அம்மா  தீபா மாலிக் மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதித்துள்ளதாம். நடிகை கோயல் மாலிக்கிற்கு கடந்த மே மாதம் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்த இரண்டு மாதமே ஆன நிலையில் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular Actress total family affected corona ft Koel Mallick | பிரபல நடிகையின் குடும்பம் கொரோனாவால் பாதிப்பு

People looking for online information on Koel Mallick will find this news story useful.