மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குறித்து அவரது மகன் உருக்கமான கவிதை
முகப்பு > சினிமா செய்திகள்மறைந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 45 வது பிறந்தநாள் இன்று (ஜூலை 12) கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது பாடல்கள் வழி ரசிகர்களால் என்றென்றும் நினைவு கூறப்பட்டு வருகிறார்.
காதல், சோகம், பிரிவு, மரணம், ஜனனம் என அனைத்து உணர்வுகளையும் தனது எளிமையான வரிகள் மூலம் சொல்வதே அவரது ஸ்பெஷல். அவர் 'தங்க மீன்கள்' படத்தில் இடம் பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காகவும், 'சைவம்' படத்தில் இடம் பெற்ற அழகே பாடலுக்காகவும் இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் விதமாக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகள் எழுதி வருகின்றனர் . இந்நிலையில் அவரது மகன் ஆதவன் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அதில், 'என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்' என்று தொடங்கி, 'எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா. இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா' என்று முடித்துள்ளார். அவரது அப்பாவை போலவே ஆதவனின் கவிதைகளும் மிகவும் எளிமையான வரிகளில் தனது வலியை சொல்லும் விதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை.
— Done Channel (@DoneChannel1) July 12, 2020