www.garudabazaar.com

பிரபல நடிகை பகிர்ந்த ஸ்கூல் ஃபோட்டோ - யார்னு தெரியுதா ? - இவங்க பிரபலமான பாடகியும் கூட

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா குறித்து பேசிய விஜய், ஆண்ட்ரியா செலக்ட்டிவாக நடித்து வருவதாகவும், நிறைய படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Popular actress shares her childhood pic which goes viral ft Andrea | பிரபல நடிகை பகிர்ந்த ஸ்கூல் ஃபோட்டோ வைரல்

பாடகர், நடிகை என இரண்டு துறைகளிலுமே வெற்றிகரமாக பயணித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.  படத்துக்கு படம் மாறுபட்ட வேடங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த 'வட சென்னை' அவரது வேடம் விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் அவர் தனது பள்ளி காலத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்த அவர் தனது பள்ளி நாட்களில் இசை பயிற்சி குறித்து தெரிவித்துள்ளார். மேலும் ''இதில் நான் யார் என்று கண்டுபிடியுங்கள்'' என கேட்க, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த போட்டோவில் ஆண்ட்ரியா எங்கே இருக்கிறார் என உங்களுக்கு தெரியுதா ?

Popular actress shares her childhood pic which goes viral ft Andrea | பிரபல நடிகை பகிர்ந்த ஸ்கூல் ஃபோட்டோ வைரல்

People looking for online information on Andrea Jermiah will find this news story useful.