''இதனால கொரோனா வைரஸ் பரவாது... மனுஷத்தன்மை இல்லாம இருக்காங்க...'' - பிரபல ஹீரோ கோபம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தேவயானியின் சகோதரரான நகுல் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த, 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'வல்லினம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

Popular Actor shares a video on instagram about Coronavirus | பிரபல நடிகர் கொரோனா வைரஸ் வதந்தி குறித்து வெளியிட்ட வீடியோ

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் நகுல் பரவலாக அறியப்படுகிறார். 'அந்நியன்', 'கஜினி', 'வேட்டையாடு விளையாடு' , 'வல்லவன்' உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செல்லப்பிராணிகள் கொரோனாவை பரப்பாது. நிறைய பேர் தங்கள் செல்லப்பிராணிகளை தவிர்க்கிறார்கள். அவர்கள் எவ்வளவு மனுஷத்தன்மை இல்லாமல் இருக்கிறார்கள். வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளை நம்பாதீர்கள். செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர் வையுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Entertainment sub editor