பிரபல நடிகர் அப்பாவாக போகிறாராம்... மனைவியுடன் வெளியிட்ட உருக்கமான பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நடிகர் மகத். இவர் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது பலருக்கும் தெரியும். இந்நிலையில் பிக்பாஸின்  இரண்டாம் சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார். இவரும் பிரபல மாடல் மற்றும் தொழிலதிபருமான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தநிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் அவரது நண்பர்களான சிம்பு அனிருத் போன்றோரும் வேஷ்டி சட்டையில் பங்குபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

popular actor shares a happy news with fans பிரபல நடிகர் அப்பாவாக போகிறாராம்

கொரோனா வைரஸ் ஆரம்பித்த காலங்களில் உலகமெங்கிலும் லாக்டவுன்  அறிவிக்கப்பட்டதையடுத்து மகத் தனது மனைவியுடன் பல அழகான பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று திருமண நாள் கொண்டாடும் மகத் மற்றும்  ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர். மகத் கூறும்பொழுது "நாங்கள் இருவரும் ஒரு அழகிய குழந்தையால்  ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் புதுவரவு இருக்கும். நன்றி பிராச்சி மிஸ்ரா  இந்த சிறந்த பரிசுக்காக. லவ் யூ" என்று கூறியுள்ளார். இந்த பதிவை பிராச்சியும் பகிர்ந்து உள்ளார். மேலும் தனது மனைவிக்கு அன்புடன் முத்தமிடும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Mahath

popular actor shares a happy news with fans பிரபல நடிகர் அப்பாவாக போகிறாராம்

People looking for online information on Mahath will find this news story useful.