www.garudabazaar.com

LATEST: எத்தனை கேமரா!!!... பொன்னியின் செல்வன் படத்துக்கு? DOP ரவிவர்மன் பகிர்ந்த புதிய BTS புகைப்படம்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து "பொன்னியின் செல்வன்" படத்தை தயாரிக்கின்றன. புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

ponniyin selvan movie oorcha shooting spot picture went viral

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயரம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ponniyin selvan movie oorcha shooting spot picture went viral

முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத் நகரங்களில் முடிந்த பின், தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா நகருக்கு சென்றுள்ளது.

ponniyin selvan movie oorcha shooting spot picture went viral

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை கொண்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார். கேப்சனில் Photo of the Day என்று பகிர்ந்துள்ளார். கிரேனில் ஒரு கேமரா அந்தரத்தில் தொங்கியபடியும், மற்றொரு கேமரா டிரைபாடில் நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது. 

ponniyin selvan movie oorcha shooting spot picture went viral

ரவிவர்மன் ISC தமிழில் ஏற்கனவே தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, ஆட்டோ கிராப், காற்று வெளியிடை, வில்லு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_)

தொடர்புடைய இணைப்புகள்

ponniyin selvan movie oorcha shooting spot picture went viral

People looking for online information on Mani Ratnam, Ponniyin Selvan, Ravi Varman will find this news story useful.