www.garudabazaar.com

பொன்னியின் செல்வன் படத்தில் இந்த ரோலில் தான் நடிக்கிறேன்! டிவீட் செய்து உறுதி செய்த நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

ponniyin selvan movie actor revealed his character

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் அஸ்வின் ககுமனு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் செய்துள்ளார். அதில் அவர் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அந்த டிவிட் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். ரசிகர் ஒருவர் டிசைன் செய்த போஸ்டரை பகிர்ந்து இந்த டிவீட்டை பதிவு செய்துள்ளார். 

ponniyin selvan movie actor revealed his character

கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவராக சேந்தன் அமுதன், கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் நண்பனாகவும், பூங்குழலி எனும் படகோட்டி பெண்ணை காதல் செய்பவனாகவும் கல்கி படைத்திருப்பார்.

ponniyin selvan movie actor revealed his character

கண்டராதித்தனாருக்கும், செம்பியன்மாதேவிக்கும் பிறந்த குழந்தைதான் சேந்தன் அமுதன் என்ற உண்மை தெரியவரும் போது, அருள்மொழிவர்மனுக்கு (ராஜராஜ சோழன்) மணிமுடி சூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு அருள்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத்துக்கொண்டு போய் சேந்தன் அமுதன் தலையில் முடியைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று ராஜ ராஜ சோழன் அறிவிப்பார். சேந்தன் அமுதனே உத்தம சோழனாக ஆட்சி செய்ததாக பொன்னியின் செல்வனில் கல்கி படைத்திருப்பார். 

ponniyin selvan movie actor revealed his character

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயரம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ponniyin selvan movie actor revealed his character

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

ponniyin selvan movie actor revealed his character

People looking for online information on Ashwin Kakumanu, Mani Ratnam, Ponniyin Selvan will find this news story useful.