COBRA D Logo Top
www.garudabazaar.com

Trailer அப்டேட் வந்த சில நாளில்.. பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட அடுத்த 'அதிரடி' தகவல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

ponniyin selvan characters of actors update revealed

Also Read | கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தை 48 முறை தியேட்டரில் மட்டும் பார்த்த வெறித்தனமான ரசிகர்!

இதன் முதல் பாகம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்களான பொன்னி நதி, சோழா சோழா ஆகியவை ஏற்கனவே வெளியாகி இருந்தது. இவை அனைத்தும் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், அடுத்தடுத்து அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ponniyin selvan characters of actors update revealed

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

ponniyin selvan characters of actors update revealed

PS 1 படத்தின் இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். ரவி வர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார். மேலும், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாக உள்ளது பற்றியும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ponniyin selvan characters of actors update revealed

ஒரு பக்கம் ரசிகர்கள் படத்தின் டிரெய்லரை எதிர்நோக்கி வரும் நிலையில், மறுபக்கம் அசத்தலான அப்டேட் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகர் சரத் குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும், நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக வீடியோ ஒன்றுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, படத்தில் உள்ள மற்ற நடிகர், நடிகைகளின் கதாபாத்திரம் கூட விரைவில் வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

 

Also Read | ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தில் சிம்ரன் கேரக்டர் இதான்.. வெளியான மோஷன் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

ponniyin selvan characters of actors update revealed

People looking for online information on Maniratnam, Ponniyin selvan characters, Ponniyin Selvan part 1 will find this news story useful.