படத்தை தடை செய்து... அவர்களை 'கைது' செய்ய வேண்டும்... காவல்துறையில் புகார் அளித்த கட்சி!
முகப்பு > சினிமா செய்திகள்சந்தோஷ் பி ஜெயக்குமார், டேனி, மீனாள் சாஹு, கரிஷ்மா, அகிர்தி சிங், ஷாலு சம்மு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இரண்டாம் குத்து. சமீபத்தில் வெளியான இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் மற்றும் டீசருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.
![Police Complaint registered against Irandam Kuthu Movie Crew Police Complaint registered against Irandam Kuthu Movie Crew](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/police-complaint-registered-against-irandam-kuthu-movie-crew-photos-pictures-stills.jpg)
இந்த நிலையில் இப்படத்தை தடை செய்து அதில் நடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என பனங்காட்டு படை கட்சி சார்பில் சென்னை தியாகராயர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இரட்டை அர்த்தமுள்ள அதிக ஆபாசமுள்ள இரண்டாம் குத்து திரைப்படத்தை தயாரித்த இயக்குநர், நடிகர், நடிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இளைய தலைமுறையினரையும் கலாச்சாரத்தையும் காத்திட வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இயக்குநர் பாரதிராஜா இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன் என விமர்சனம் செய்ய, பதிலுக்கு டிக் டிக் டிக் படத்தின் போது உங்கள் கண்கள் கூசவில்லையா? என படத்தின் நாயகனும், இயக்குநருமான சந்தோஷ் பி ஜெயக்குமார் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.