Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

ரம்யா பாண்டியனை மோசமாக பேசிய ரசிகர்... சரியான பதிலடி கொடுத்த பவித்ரா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது.

pavitha sharp reply to ramya hater ரம்யா பாண்டியனை மோசமாக பேசிய ரசிகர்

இந்த வாரம் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக சீசன் 1 மற்றும் 2 போட்டியாளர்கள் மோதிக்கொண்டனர். அதேபோல் இந்த வாரம் பவித்ரா பங்கேற்கவில்லை . ரம்யா பாண்டியன் மற்றும் புகழ் இருவரும் ஜோடி சேர்ந்து சமைத்தனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் புகழ் மற்றும் பவித்ராவை டேக் செய்து "தலைவா உங்கள் இருவரையும் தான் எனக்கு பிடித்திருக்கிறது. இனிமேல் ரம்யா பாண்டியனுடன் தயவுசெய்து ஜோடி சேர வேண்டாம். முதல் 45 நிமிடம் அவரது நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. இதயத்திலிருந்து சொல்கிறேன் பவி தான் உங்களுக்கு சரியான ஜோடி" என்று கூறியுள்ளார். இதனை பார்த்த பவித்ரா தற்போது அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "இரு போட்டியாளர்களை ஒப்பிடுவது மிகவும் ஈஸி. அதேபோல் அவர்களது குற்றங்களை கண்டு பிடிப்பதும் சுலபம். ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ. இதில் எங்களது நோக்கம் உங்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே. ரம்யா ஒரு சிறந்த இதயம் படைத்தவர். கடந்த சீசன் முழுவதும் நம்மை மகிழ்வித்தார். ஒரு மணி நேரத்தை வைத்து முடிவு செய்வது தவறு. அன்பை பகிருங்கள்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

pavitha sharp reply to ramya hater ரம்யா பாண்டியனை மோசமாக பேசிய ரசிகர்

People looking for online information on Pavithra, Ramya Pandiyan will find this news story useful.